eraeravi
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Jun 28, 2010 (16 years) |
- | 3 | 1 |
- Forum role
- Member
- Member since
Jun 28, 2010 (16 years)
- Last activity
- -
- Topics created
- 3
- Replies created
- 1
Bio
இரா. இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
1. கவிதைச் சாரல் - 1997
2. ஹைக்கூ கவிதைகள் - 1998
3. விழிகளில் ஹைக்கூ - 2003
4. உள்ளத்தில் ஹைக்கூ - 2004
5. என்னவள் - 2005
6. நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
7. கவிதை அல்ல விதை - 2007
8. இதயத்தில் ஹைக்கூ - 2007
[தொகு] சிறப்புக்கள்
* 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
* இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
* இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
* சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
* இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம் "தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
* இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு: தமிழகக் கவிஞர்கள்